சிறுநீரக கோளாறுகள்
Kidney Disorders

மருத்துவர்களுடன் ஆலோசனை பெற இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை பூர்த்தி செய்யவும்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்

கீழ்கண்ட அறிகுறிகள்ளாகவும் இருள்களாம் இவை நபருக்கு நபர் வித்தியாசப்படும். ஒருவருக்கு அடிப்படையில் இருக்கும் பின்னணி நோய்களும் அவற்றின் தீவிரங்களும் இந்த மாற்றங்களைக் கொண்டு வர வாய்ப்புஉள்ளது.

பொதுவான அறிகுறிகள்;

முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் அடிவயிறும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும் நிலைகளாகும்

சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி

ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல. ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும்.

(உதாரணத்திற்கு நெஃப்ராடிக் சின்ட்ரோம் போன்ற நோய்வகைகள்) ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும்.

பசியின்மை மற்றும் வாந்தி எடுத்தல்

பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

இது மேலும் மேலும் பழுதாகும்பொழுது, விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும்பொழுது, சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும்.

உயர்இரத்த அழுத்தம் – ஹைப்பர் டென்ஷன்;

சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம்.

இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள் கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும்.

இரத்தசோகையும் உடல்நலிவாதலும் உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும்.

மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம்.

சிறுநீரக சார்ந்த பொதுவான பிரச்னைகள்:

சிறுநீரின் கன அளவு குறைதல் சிறுநீரக நோய்களின் பொதுவான முக்கிய அறிகுறியாகும்.

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழிதலும், சிறுநீர் கழிக்கும்பொழுது இரத்தமும் சேர்ந்து போதல் அல்லது சீழும் சேர்ந்து வருதல் என்பன சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி.

சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்பு வலியை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் அளவு மிகவும் குறைந்து துளித்துளியாக வெளி வரும். மிகவும் மோசமான நிலைகளில், சிறுநீர் கழிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.

மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் சிறுநீரக நோய் என்று முடிவுகட்டி விடக் கூடாது. இவ்வகை அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும்.

சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெருவது நல்லது.

கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடு நாட்களாகவே கூட நீடித்துக் கொண்டு இருக்கலாம்.

வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம். இளம் வயதிலேயே, இரத்த அழுத்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், சிறுநீரக நோய் எதுவும் தாக்கவில்லை என்பதை முதலில் மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும்.

நாட்பட்ட நோய்களுக்கு பாதுகாப்பான மற்றும்
பயனுள்ள யுனானி மூலிகை சிகிச்சை

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்கில் B.U.M.S பட்டதாரி மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களுடன் இணைந்து, சமகால பண்டைய நடைமுறைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து நவீன அறிவியலுடன் யுனானி மூலிகை சிகிச்சையை வழங்குகிறார்கள்.

நாங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகளை பற்றியும் எங்கள் நோயாளிகளுக்கு கற்பிக்கிறோம்.

நீங்கள் எங்கள் மருத்துவர்களுடன் நேரடியாக எங்கள் சிகிச்சை மையத்தில் ஆலோசனைகளைப் பெறலாம், இல்லையெனில் வாட்ஸ்ஆப் அல்லது ஆன்லைன் ஆலோசனை படிவத்தைப் பயன்படுத்தி கூரியர் மூலம் தேவையான ஆலோசனையும் மருந்துகளும் பெறலாம்.

நீங்கள் கம்ப்யூட்டர் – மொபைல் வீடியோ கோணபிரென்ஸ் இல்லையெனில் தொலைபேசி மூலமாக ஆலோசனை பெற விரும்பினால்.

முதலில் கன்சுலேட்டதின் (பீஸ்) கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இல்லையெனில் இலவச ஆன்லைன் ஆலோசனை படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

எங்கள் மருத்துவர்கள் குழு உங்களுக்கு சிகிச்சை விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள்.

எங்கள் முகவரி

அல் கைஃப் ஹெர்பல் கிளினிக்

Z. A பிளாசா – லண்டன் பெட்
ஐயங்கார் பேக்கரியின் எதிரில்
அண்ணா சிலைக்கு அருகில்
கிருஷ்ணகிரி. 635002
தமிழ்நாடு – இந்தியா

ஆலோசனை நேரம்

திங்கள் முதல் சனி வரை
காலை 10:00 – இரவு 8:00 மணி

ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை

தொலைபேசி எண்

மொபைல்
+91 70126 19773

வாட்ஸ்அப்
+91 95005 53456

கீழேயுள்ள நாடுகளுக்கு கூரியர் மூலம் மருந்துகள் பெறலாம்

  • கத்தார்
  • குவைத்
  • மஸ்கட்
  • துபாய்
  • அபுதாபி
  • ஷார்ஜா
  • பஹ்ரைன்
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • இங்கிலாந்து
  • அமெரிக்கா
  • சவூதி அரேபியா

எங்கள் மருத்துவ சேவைகள்

  • முடி உதிர்தல்
  • சரும நோய்கள்
  • பித்தப்பை கற்கள்
  • பெண் கருவுறாமை
  • கல்லீஈரல் சிகிச்சை
  • தைராய்டு சிகிச்சை
  • நரம்பியல் சிகிச்சை
  • சிறுநீரக கோளாறுகள்
  • புரோஸ்டேட் சிகிச்சை
  • ஆண் மலட்டுத்தன்மை
  • நீரிழிவுநோய் சிகிச்சை
  • ஆண் பாலியல் சிகிச்சை
  • பெண் பாலியல் சிகிச்சை
  • டான்சில்லிடிஸ் சிகிச்சை
  • பெண் மார்பக விரிவாக்க
  • ஆண் உறுப்பு வளர்ச்சியின்மை